கே.ஜி.எஃப் நிறுவன தயாரிக்கும் படத்தை இயக்கி, நடிக்கும் பிரித்திவிராஜ்
Prithviraj will be directing the next film of KGF Films.
கே.ஜி.எஃப் பட நிறுவனத்தின் அடுத்த படத்தை நடித்து இயக்கவிருக்கிறார் பிரித்திவிராஜ்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கே.ஜி.எப் இரண்டாம் பாகம் திரைப்படம் வெளியாகி 1,200 கோடி ரூபாய் அளவிற்கு வசூலை குவித்தது. இதனால் 'கே.ஜி.எஃப் 2' பாகங்களில் தயாரிப்பு நிறுவனமான ஹோமேபெல் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் ஹொமேபெல் நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக பிரித்திவிராஜ் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது, இந்த படத்தில் பிரிதிவிராஜ் ஹீரோவாக நடிப்பதுடன் படத்தை அவரே இயக்கவும் செய்கிறார்.