ஒரே சூப்பர் ஸ்டார் தான் - ஒரே அடியாக அடித்த உபேந்திரா!

Update: 2023-03-13 18:40 GMT

இந்தியாவிலேயே ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான் இருக்கிறார் அது ரஜினிகாந்த் மட்டும் தான் என உபேந்திரா கூறிய விவகாரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீப காலமாக சூப்பர் ஸ்டார் யார் என்ற விவகாரம் பல விருது விழாக்களிலும், பல ஆடியோ வெளியீட்டு விழாக்களிலும், யூ டூப் சேனல்களிலும் பூதாகரமாக வெடித்தது. அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் இவர்தான் என தனக்கு பிடித்த நடிகர்களை பல ரசிகர்கள் கூறி வந்தனர், பல திரை திரையுலகப் பிரமுகர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் நடிகர்களின் பெயரை கூறி வந்தனர்.

இந்த நிலையில் யார் சூப்பர் ஸ்டார்? யார் சூப்பர் ஸ்டார்? என பெரும் போட்டியே நிலவுவது போன்று அடுத்த சூப்பர் ஸ்டாருக்கு நிறைய பேர் அவசரப்பட்டனர். ஆனால் தற்பொழுது கப்ஜா படத்தின் விழாவில் கலந்து கொண்ட கன்னட நடிகர் உபேந்திராவிடம் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஒரே போடாக போட்டார், 'அடுத்த சூப்பர் ஸ்டார், புதிய சூப்பர் ஸ்டார் என்னை யாரும் கிடையாது ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அது ரஜினி சார் மட்டும்தான்' என கூறுகிறார் எப்படி உபேந்திரா கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Similar News