சென்னை திரும்பிய விஜய் - அதுக்குள்ள லியோ ஷூட் படப்பிடிப்பு முடிஞ்சுட்டா?

Update: 2023-03-22 00:48 GMT

லியோ படப்பிடிப்பை நடிகர் விஜய் முடித்துள்ளார்.

இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'லியோ' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் விஜய் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிவரும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

Similar News