தசரா படத்தின் அடுத்த அசத்தல் அப்டேட்!

Update: 2023-03-27 13:47 GMT

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்


இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 'தசரா' படத்தின் டிரைலர் மற்றும் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.


இந்நிலையில், 'தசரா' படத்தின் நான்காவது பாடலான 'ஓ தாலேலாலோ' பாடல் நாளை மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Similar News