சாதி அடையாளம் மற்றும் திரிஷா விவகாரம்!! சர்ச்சையில் சிக்கிய பார்த்திபன்!!
By : Bharathi Latha
Update: 2026-03-17 14:18 GMT
நடிகர் பார்த்திபன் சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் தன்னை ஒரு நாயுடு சமூகத்தை சேர்ந்தவன் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு, திரிஷாவை குறித்து அவர் பேசிய கருத்தும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
அதற்கு திரிஷா, ஒரு மைக் கிடைத்துவிட்டால் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்று நினைப்பது புத்திசாலித்தனம் அல்ல!! என்று பதிலடி கொடுத்தார். பார்த்திபன் தனது சாதி அடையாளத்தை முன்னிறுத்தி பேசியது, முற்போக்கான கருத்துகளை பேசும் அவரிடமிருந்து வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெட்டிசன்கள் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பார்த்திபன் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார், தன் பேச்சு யார் மனதையாவது கீறி புண்படுத்தி இருந்தால் வருத்தம் என்று கூறியுள்ளார்.