தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். அந்தவகையில் கடந்த வருடம் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் 'இந்தியன் 2'. இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்திலிருந்து பல இன்னல்களை சந்தித்தது என்றும்,அதன் பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தை அடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
மேலும் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு வருட காலமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் இந்த படம் தொடங்கப்படாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
இதனை அடுத்து 'இந்தியன் 2' படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என்றும் சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. லைகா நிறுவனம் தனது மனுவில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்திற்கு 150 கோடி பட்ஜெட் போடப்பட்டதாகவும், ஆனால் இதுவரை 256 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் இயக்குனர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில் அவருக்கு இதுவரை 14 கோடி வழங்கப்பட்டு, இந்தியன் 2 படத்தை முடிக்காமல் அவர் வேறு படத்தை இயக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இச்செய்தி சினிமா வட்டாரங்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.