தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை திரிஷா. இவர் திரையுலகில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் உள்பட 6 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்த ஆறு படங்களில் ஒன்றான த்ரிஷாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று 'பரமபதம் விளையாட்டு'. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே ஒரு சில முறை அறிவிக்கப்பட்டு அதன்பின் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஹாட்ஸ்டார் (HOTSTAR) ஓடிடியில் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதை அறிந்த திரிஷாவின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இப்படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
மேலும் இப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி, வேலராமமூர்த்தி, ஏஎல் அழகப்பன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை அம்ரேஷ் கணேஷ் இசையில், தினேஷ் ஒளிப்பதிவில், பிரேம்குமார் படத்தொகுப்பில், திருஞானம் இயக்கியுள்ளார் என்பதாகும்.