ரஜினி பட வில்லனுக்கு கொரோனா! வருத்தத்தில் ரசிகர்கள்!

Update: 2021-04-04 12:48 GMT

சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்தவகையில் பொதுமக்கள், நடிகர், நடிகைகள் அரசியல்வாதிகள், என பலரும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று ரஜினியின் தர்பார் பட நடிகை நிவேதா தாமஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று பரவிய நிலையில் இன்று ரஜினி நடித்த '2.0' உள்பட பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்த "அக்ஷய் குமாருக்கு" கொரோனா பரவியுள்ளது. இதுகுறித்து அவர் அவரது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பது:இன்று காலை எனக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக சோதனை மூலம் தெரியவந்தது.

இதனை அடுத்து கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின்படி உடனடியாக நான் வீட்டிலேயே என்னை நானே தனிமைப் படுத்திக் கொண்டேன். மேலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னிடம் தொடர்பு கொண்டு இருந்த அனைவரும் தயவு செய்து உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். விரைவில் நான் குணமாகி வருவேன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.









இந்த செய்தி ரசிகர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது அவர் தற்போது ஒரே நேரத்தில் 6 பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரசிகர்களும், நெட்டிசன்களும் இவர் விரைவில் குணமடைந்து வர தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Similar News