ஓட்டு போட விஜய் சைக்கிளில் வந்ததற்கான உண்மையான காரணம் - விஜய் தரப்பு விளக்கம்!

Update: 2021-04-06 11:40 GMT

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெறும் நிலையில் பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும், அரசியல்வாதிகளும் அவர்களது வாக்குகளை செலுத்தி வரும் நிலையில் தளபதி விஜய் இன்று அவரது நீலாங்கரை வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




தளபதி விஜய் ஏன் திடீரென சைக்கிளில் வந்து வாக்களித்தார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என்பதும் பெட்ரோல் விலை உயர்வை குறிப்பதற்காகவே அவர் சைக்கிளில் வந்ததாகவும், லாக்டவுனின் போது பலர் நடந்து சென்றதை குறிப்பிடுவதற்காக என்றும் சிலர் கூறியது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.










இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தளபதி விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை: நடிகர் விஜய் ஓட்டு(vote) போடும் இடம் அவர் வீட்டுக்கு அருகிலேயே பூத் இருந்தது என்பதும், அதுமட்டுமின்றி பூத் இருக்கும் இடம் சின்ன சந்து என்பதால் அங்கு காரை நிறுத்த முடியாது மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Similar News