கொரோனாவால் பாதிக்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் தற்போதைய நிலை - அவரே வெளியிட்ட தகவல்!

Update: 2021-04-06 13:30 GMT

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி என்ற படத்தின் மூலம் அதிக ரசிகர்களின் மனதில் இடம் பெற்று பிரபல இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் சமீபத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.





அந்த வகையில் சமீபத்தில் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் அவர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தான் தற்போது கொரோனவில் இருந்து முழுமையாக குணம் அடைந்து விட்டதாகவும் தனக்காக வாழ்த்து தெரிவித்த, பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.













மேலும் இன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்ததாக, வாக்களித்த விரல் மையுடன் கூடிய புகைப்படம் ஒன்றினை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் கொரோனாவில் இருந்து மீண்டதற்காக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News