பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது தளபதி விஜய் பட இயக்குனரா?

Update: 2021-04-06 13:37 GMT

தமிழ் சினிமாவில் மாஸ்டர் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பாகுபலி பட நடிகரான பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'மாஸ்டர்' படத்தை இயக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.





இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் 'மாஸ்டர்' படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஐதராபாத் சென்றபோது பிரபாஸை லோகேஷ் கனகராஜ் சந்தித்ததாகவும், அப்போது லோகேஷ் கூறிய கதை பிரபாஸ்க்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் இதனையடுத்து இருவரும் அவ்வப்போது டச்சில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.


மேலும் பிரபல நடிகரான பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ், ராதே ஷ்யாம் மற்றும் சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் தங்களுடைய படங்களை முடித்தபின்னர் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் தமிழ் தெலுங்கு உட்பட பான் - இந்தியா படமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Similar News