பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த கைதி பட வில்லன் - யார் தெரியுமா?

Update: 2021-04-12 01:00 GMT

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான மணிரத்னம் இயக்கிவரும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் கைதி படத்தில் நடித்த ஹீரோவான கார்த்தி தான் நாயகன் என்ற நிலையில் தற்போது அதே படத்தில் நடித்த வில்லன் நடிக்க இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.














அந்தவகையில் மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். எம்ஜிஆர், சிவாஜி, கமல் உள்பட பலர் இந்த படத்தை உருவாக்க முயற்சித்தும் முடியாமல் போகவே மணிரத்னம் தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார்.









இந்நிலையில் இப்படத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி திரையுலகினர் ஆன விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, ஐஸ்வர்யாராய், மோகன்பாபு, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார் என பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் 'கைதி' திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.


கைதி திரைப்படத்தில் ராம் என்ற கேரக்டரில் நடித்த "அம்ஜத்கான்" தற்போது முக்கிய வேடத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்துள்ளார். இதனை அவரே அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Similar News