கொரோனாவால் பாதிக்கப்பட்ட காமெடி நடிகர் செந்திலின் தற்போதைய நிலை!

Update: 2021-04-14 13:04 GMT

தமிழ் சினிமாவில் 80-90களில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் செந்தில்.அந்தவகையில் வகையில் சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்ற தகவல் வெளியானது.

இந்தநிலையில் சற்று முன் கொரொனாவால் பாதிக்கப்பட்ட செந்தில் வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் யாரும் பயப்பட வேண்டாம். நான் நன்றாக இருக்கின்றேன். கொரோனா வந்தால் யாரும் பயப்படத் தேவையில்லை.


டெஸ்ட் எடுத்து விட்டு வீட்டில் நீங்கள் தனிமைப்படுத்தி கொண்டு டாக்டர்கள் சொன்ன மருந்து மாத்திரைகளை சரியாக சாப்பிடுங்கள்,எனக்கு கொரோனா தடுப்பூசி போட்டதால்ல் அதிக அளவு பாதிப்பு இல்லை, எனவே நீங்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். அந்த ஊசியை போட்டுக் கொண்டால் அனைவருக்கும் நல்லது என்றும் இரண்டாவது டெஸ்ட் விரைவில் எடுக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

டெஸ்ட் எடுத்து முடித்தவுடன் வீட்டிற்கு செல்லலாம் என்றும் அதன்பின் வீட்டில் இருந்தே சிகிச்சையை தொடரலாம் என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். எனவே என்னை பற்றி யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அந்த வீடியோவில் அவர் கூறியிருந்தார். இந்த வீடியோவை பார்த்த இவரது ரசிகர்கள் விரைவில் முழுவதுமாக குணமடைய வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News