இன்று காலை காலை 11 மணிக்கு "Roar of RRR" என்று ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேங்கிங் வீடியோ வெளியிடப்படுகிறது.
ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் பெரும் செலவிலான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தை விரைவில் படப்பிடிப்பை முடித்து விட்டு ஏற்கனவே திட்டமிட்டது போன்று அக்டோபரிலேயே படத்தை வெளியிட்டு விட தயாராகி வருவதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாக உள்ளதாக அப்படக்குழு ஏற்கனவே ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதை மீண்டும் டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளனர். இன்று காலை 11 மணிக்கு "Roar of RRR" என்று அப்படக்குழு இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.