எதிர்மறை விமர்சனங்களை அடிச்சு தூக்கிய அண்ணாத்த - 13 நாட்களில் 225 கோடி வசூல் மழை !

Update: 2021-11-18 08:30 GMT

பல விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு 225 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைகள் ஏற்படுத்தி வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம்.




 


இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தீபாவளி தினத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படம் உலகம் முழுவதும் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் மட்டும் 1100 திரையரங்குகளில் வெளியாகி தமிழில் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது.




 


ஆனால் படம் பற்றி பலவித எதிர்மறை விமர்சனங்கள் விமர்சகர்கள் என்ற பெயரில் உலா வரும் நபர்களால் பரப்பப்பட்டாலும் அவை அனைத்தையும் கடந்து அண்ணாத்த படம் 13 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.225 கோடி வசூலித்துள்ளது.

Similar News