நள்ளிரவில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முன்பு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். வழக்கமாக பிறந்த நாள் என்றால் ஒரு வாரத்திற்கு முன்னரே அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடி வருவது வழக்கம்.;

Update: 2021-12-12 03:35 GMT
நள்ளிரவில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முன்பு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். வழக்கமாக பிறந்த நாள் என்றால் ஒரு வாரத்திற்கு முன்னரே அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடி வருவது வழக்கம்.

இந்நிலையில், இன்று 71வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த்தை பெருமை படுத்தும் விதமாக நேற்று நள்ளிரவு சென்னை, போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பாக ரசிகர்கள் ஒன்றுகூடி கேக் வெட்டி கொண்டாடினர்.

அது மட்டுமின்றி நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை வெளியில் இருந்தவாறு கோஷங்களை வெளிப்படுத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Source, Image Courtesy: Polimer


Tags:    

Similar News