பத்து வருடத்தில் நூறு கோடி அசத்தும் சிவகார்த்திகேயன்!

Update: 2022-10-07 06:09 GMT

இன்றைய தலைமுறையினரில் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான "மெரினா" திரைப்படம் மூலம் தனது வெள்ளித்திரை பயணத்தை தொடங்கினார்.

கடந்த 10 வருடத்தில் 20 திரைப்படங்கள் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் தற்போது தனது 20வது படத்தில் 100 கோடி வியாபாரம் தொடும் வரை அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் தீபாவளி அன்று வெளியாகயிருக்கும் திரைப்படம் "பிரின்ஸ்" இதில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், தமன் இசையமைக்க தெலுங்கு பட இயக்குனர் அனு உதீப் இயக்குகிறார், தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் சுரேஷ் பாபு தயாரிக்கிறார். பிரின்ஸ் படத்தின் வியாபாரம் 100 கோடியை தொடும் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு - 30 கோடி

டிஜிட்டல் & தொலைக்காட்சி உரிமம் - 42கோடி

வெளிநாட்டு உரிமம் - 6.5 கோடி

ஹிந்தி டப்பிங் உரிமம் - 6 கோடி

கர்நாடக - 1.9 கோடி

கேரளா - 60 லட்சம்

ஆடியோ உரிமம் - 3.5 கோடி

தெலுங்கில் தயாரிப்பாளரே நேரடியாக வெளியிடுகிறார்.

ரிலீஸ்க்கு முன்பே தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை தரும் முன்னணி நடிகர்கள் பட்டியலில் சிவகார்த்திகேயனும் இணைந்து விட்டார்.

Similar News