ரசிகர்களுக்கு வரும் 15ம் தேதி இன்ப அதிர்ச்சி தரவிருக்கும் இயக்குனர் ராஜமௌலி!
வரும் ஜூலை 15-ந்தேதி அன்று ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பாகுபலி 2 படத்தை அடுத்து இயக்குனர் ராஜமவுலி இயக்கியுள்ள அடுத்த பிரமாண்ட படம் ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியாபட் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் வசன காட்சிகள் அனைத்து படமாக்கப்பட்டு விட்ட நிலையில், இரண்டு பாடல்கள் மட்டுமே பாக்கி உள்ளது.
இதனையடுத்து அந்த பாடல்களை அடுத்த மாதத்தோடு படமாக்கி விட திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ராஜமவுலி. இந்த நிலையில் வருகிற ஜூலை 15'ம் தேதி அன்று காலை 11 மணிக்கு ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகும் என படக்குழுவினர் டுவிட்டரில் அறிவித்துள்ளனர்.