நடிகர் சிவகார்த்திகேயனை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.
சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து இயக்குனர் பாண்டிராஜின் 'மெரினா' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். பின்னாளில் தமிழ் சினிமாவின் முக்கிய பொழுதுபோக்கு கதாநாயகனாக உயர்ந்தார். சென்ற அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கலைமாமணி விருது வாங்கும் அளவிற்கு இவரின் திரையுலக பயணம் உயர்ந்தது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்கள் சில திட்டமிடப்பட்டதையும் தாண்டி அதிகம் செலவு செய்யப்பட அந்தக் கடன் சிவகார்த்திகேயன் பக்கம் திரும்பியது. இதற்காக சன் டிவியோடு மெகா ஒப்பந்தம் போட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சன் டிவி தயாரிப்பில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 5 படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒரு படத்துக்கு கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு ₹15 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். ஐந்து படங்களுக்கும் சேர்த்து மொத்தம் ₹75 கோடி சம்பளம் என கிசுகிசுக்கிறது கோலிவுட். தற்போதைய கடன் சூழலில் இருந்து வெளிவர இது ஒரு நல்ல டீல் என்பதால் சிவகார்த்திகேயன் இதற்கு உடனடியாக ஒப்புதம் தெரிவித்திருக்கிறார்.