தமிழக அரசுக்கு ₹2 கோடி கொரோனோ நிதி வழங்கிய லைகா நிறுவனம்!

Update: 2021-06-20 07:45 GMT

தற்பொழுது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா ₹2 கோடியை தமிழக அரசின் கொரோனோ நிவாரண நிதியாக அளித்துள்ளது.


கொரோனோ இரண்டாம் அலை காரணமாக அரசு தரப்பில் இருந்து நிதி உதவி வேண்டி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து பல தரப்பில் இருந்தும் நிவாரணம் நிதி தமிழக அரசுக்கு வழங்கிய படி இருந்தனர்.


இந்நிலையில் தமிழ் சினிமாவின் பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகாவின் சுபாஸ்கரன் சார்பில் ₹2 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து லைகா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர்ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கவுரவ் சச்ரா ஆகியோர் வழங்கினார்.

Similar News