இந்தியன் 2 படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகியுள்ளார்.
காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் மாதம் ஆண்டு கொரோனா நேரத்தில் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். காஜல் அகர்வால் தமிழில் பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். வெளியீட்டுக்காக இந்தப் படம் காத்துக்கொண்டிருக்கிறது.
கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். இந்த படம் திடீர் விபத்து, கொரோனா, ஷங்கர் லைகா மோதல் உள்ளிட்ட சில பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் காஜல் கர்ப்பமாக இருப்பதால் இதில் கலந்துகொள்ள முடியாது என்றும், படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.