வருகிறது ஆர்.ஆர்.ஆர் 2 - அசத்தல் அப்டேட் இதோ!

Update: 2023-03-18 01:47 GMT

ஆர் ஆர் ஆர் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ராஜமௌலி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருதுவரை சென்று வென்று வந்த மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஆர் ஆர் ஆர், ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்த படம் இந்திய சினிமாவை உலக அளவில் எடுத்துச் சென்றது.

மேலும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வசூல் செய்து சாதனை படைத்தது, இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி வருமா வராதா என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் ராஜமௌலி அடுத்த பேட்டிகள் ஆர் ஆர் ஆர் படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயமாக உருவாகும் விரைவில் இந்த படத்தின் பணிகளை தொடங்க முடிவெடுத்துள்ளேன் இசையமைப்பாளர் கீரவாணி சொன்ன ஒரு வரி கதை என்னை கவர்ந்துள்ளது, அதை பற்றி தந்தையிடம் கூறி கதையாக உருவாக்க திட்டமிட்டுள்ளேன் விரைவில் இதற்கான பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளேன் எனக் கூறியது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்துள்ளது.

Similar News