பத்து நாட்களில் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது 'புஷ்பா'.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடித்துள்ள படம் 'புஷ்பா'. பான் இந்தியா படமாக வெளிவந்துள்ள இப்படம் விமர்சன ரீதியாக சரியான வரவேற்பை பெறவில்லை என்றாலும் வசூலை வாரி குவித்து வருகிறது.
நேற்று வரை உள்ள நிலவரப்படி தமிழ்நாட்டில் ரூ.15 கோடி, கர்நாடகத்தில் ரூ.16 கோடி, கேரளாவில் ரூ.8 கோடி, வட இந்தியாவில் ரூ.25 கோடி, அமெரிக்காவில் ரூ.15 கோடி, தெலுங்கு மாநிலங்களில் ரூ.100 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்துள்ளது எனவும் மொத்தமாக பத்து நாட்களில் ரூ.200 கோடி வசூலை 'புஷ்பா' தாண்டிவிட்டது எனவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.