"மணி ரத்னமே இனி அதுபோன்ற படத்தை எடுக்க முடியாது" - அலைபாயுதே விமர்சனம்! #21YearsOfAlaipayuthey

Update: 2021-04-14 07:38 GMT

அலைபாயுதே திரைப்படம் குறித்து விக்னேஷ் பண்டித்துரை என்பவர் 2014-ஆம் ஆண்டு எழுதிய பதிவு கீழே மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

அலைபாயுதே படத்தைப் போல் மற்றொரு காதல் படம் வருவதற்கு இனி வாய்ப்புகள் இல்லை என்று எளிதாக சொல்லலாம். அந்த படத்தின் அழகியல் டைரக்டரின் யதார்த்தமான காட்சியமைப்பில் மட்டுமே அடங்கியிருக்கிறது என்று சொன்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நாளில் மணிரத்னமே நினைத்தாலும் அப்படியான ஒரு காதல் கதையை எடுப்பது சாத்தியமற்றது. காரணம் நாம் அனைவரும் இன்று ஸ்மார்டாகி விட்டோம்.

வாட்ஸாப், ஃபேஸ்புக் போன்றவைகள் காதலை கூவிக் கூவி மலிவாக விற்பனை செய்கிறது. அலைபாயுதே வந்த காலக்கட்டத்தில் நாம் காதலிக்கும் பெண்ணின் பெயரைக் கண்டுபிடித்ததையே சாதனையாக நினைத்து அன்று முழுவதும் அவளுடைய பெயரையே உதடுகள் முணுமுணுக்கும். அதற்கு பிறகு அவள் எப்படி, வீடு எங்கே, யாரையும் காதலிக்கிறாளா, நமக்கு போட்டியாக யாரும் இருக்கிறானா, அப்பா போலீஸா, அண்ணன் ஏரியாவில் பிரபலமா போன்ற டீடெய்ல்ஸ் வேண்டுமென்றால் அவள் படிக்கும் கிளாஸில் ஒரு அடிமையைப் பிடிக்க வேண்டும். அவனுக்கு நாம் அடிமையாக நடிக்க வேண்டும். அவனிடம் நைஸாக பேசி மேட்டரை வாங்கி ஓரளவுக்கு ஃபேவராக இருக்கிறது என்று தெரிந்தால் நம் ஹீரோயிசத்தை அவள் வரும் போதும் போகும் போதும் வெளிப்படுத்த ஆரம்பிப்போம். சிம்பிள் டேட்டாவை கலெக்ட் செய்ய எவ்வளவு லாங் ப்ராசெஸ்.. இதை அனுபவிக்கும் போது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்பது அப்போது காதலித்தவர்களுக்குத் தான் தெரியும்.

இப்போ இதற்கு ஒன்றும் செய்ய வேண்டாம்.. அவள் பெயரை ஃபேஸ்புக்கில் சரியாக டைப் செய்து சேர்ச் செய்தால் போதும். நமக்கு தேவயானதைக் கடந்து அவள் வீட்டு நாய் குட்டி எந்த வீட்டு நாய்களுக்கு பிறந்தது என்ற நியூஸ் முதற்கொண்டு நமக்கு தெரிந்து விடும். சப்ப மேட்டர்ல.. ஆனால் இப்படியான சப்ப மேட்டர்கள் தான் காதலை சப்பையாக மாற்றி விட்டது.

காதலிக்க அர்ப்பணிக்கும் மனம் வேண்டும், தூய்மை வேண்டும், ஹேர் வேண்டும் அதை ப்ளக் பண்ண வேண்டும் என்றெல்லாம் காதலிக்காதவர்கள் தான் ஜல்லியடிப்பார்கள். காதலிக்க கிறுக்குத்தனம் தான் வேண்டும். அது தான் அடிப்படை இன்வஸ்ட்மெண்ட். அவள் வீட்டுக்கு முன்பு வண்டியில் சென்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி ஹாரன் அழுத்த வேண்டும். அவள் அப்பாவுடன் காரில் செல்லும் போது அவருக்கு முன்னால் சென்று பல அலம்பள்ஸ் செய்து அவளுடைய பயம் கலந்த சிரிப்பை சைடு மிரர் வழியாக ரசிக்க வேண்டும். இப்படி பல கிறுக்குத்தனங்களை ஸ்மார்டாக செய்ய வேண்டும்.

அலைபாயுதே படத்தில் சக்தி மெடிக்கல் கேம்ப் சென்ற போது எங்கிருக்கிறாள் என்று தெரியாமலே கிறுக்குத்தனமாக தேடிச் சென்றதனால் தான் கார்த்திக்கை கல்யாணம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.

இப்போது இருக்கும் டெக் உலகை யோசித்துப் பாருங்கள்.. இவள் எங்கிருக்கிறாள் என்று கூகுள் மேப்ஸில் செக் இன் செய்வாள்.. இவன் அங்கு வாழைப்பழத்தை உரித்து கொடுத்தது போல் அங்கு சென்றிருப்பான் அல்லது கம் சூன்.. மிஸ் யூ பேபி என்று மெசேஜ் அனுப்பி விட்டு மற்றொரு தோழிக்கு ஹாய்.. வாட் டூயிங் என்று மெசேஜ் டைபிப்பான்.

"எவனோ ஒருவன் வாசிக்கிறான்… இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்" என்ற வரிகளுக்கு அவசியமே இருந்திருக்காது.

ஸ்மார்ட் ஃபோன்ஸ் நம்மை ஸ்மார்டாக மாற்றுவது போல் மாயையை ஏற்படுத்தி மூளையை மழுங்கடித்து விட்டது. ஸ்மார்ட் ஃபோன் காதல், காதலை இரண்டு வாரத்தில் மொக்கையாக மாற்றி மூன்றாவது வாரத்தில் மற்றொரு காதலை ஹூக் அப் செய்து வைக்கிறது.

லேண்ட்லைன் ஃபோனுக்கு கால் செய்வதற்கே எக்ஸ்ட்ரா ஸ்மார்ட்நெஸ் வேண்டும். ரிங் போன பிறகு ஹார்ட் வெளியே வந்து துடிக்கும்.. அவள் அம்மா எடுத்தால் என்ன செய்வது அப்பா எடுத்தால் என்ன செய்வது என்று தனித்தனியாக யோசிக்க வேண்டும். இதை விட நம் வீட்டில் ஃபோன் அடிக்கும் போது இதயத்துடிப்பே நின்று விடும். அப்படியே அட்டன் செய்தாலும் "ம்.. ஆமா டா.. படிச்சுட்டேன் டா.. நீ படிச்சியா?" என்று சமாளிக்க வேண்டும். அதுவே இரண்டு வீட்டிலும் யாரும் இல்லை என்றால் செம்ம்ம ஜாலி.. அசட்டு தனமாக வழிந்து முத்தம் கேட்கலாம்.. ஒரே ஒரு முத்தம் கொடு செல்லம் என்று காலில் விழுகாத குறையாக கெஞ்சினால் "ச்ப்" என்று ஒரு சத்தம் கேட்கும். அப்போது டெஸ்டோஸ்டிரோன் லெவல் பீக்கில் இருக்கும்.

ஆனால் இப்போது.. ஹாய் டார்லிங் என்று மெசேஜ் அனுப்பினால், பத்து முத்த ஸ்மைலி அனுப்பி முத்தத்தின் சென்சிடிவிடியே இல்லாமல் செய்து விட்டோம். அதுவும் இந்த செல்ஃபி, நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே வாராமல் செய்து விட்டது. ஸ்கேண்டல் வீடியோஸையும் டௌன்லோட் செய்ய வைக்கிறது.

நம் கையில் இருக்கும் ஃபோன் நம்மிடமிருந்த ஸ்மார்நெஸ்ஸை தன் பெயராக வைத்துக்கொண்டு நம்மை கையாளாகதவர்களாக மாற்றி விட்டது.

அலைபாயுதே காலத்தில் காதலித்த காதலர்களுக்குத் தான் தெரியும்.. முத்தம் ஸ்மைலியில் சேர்ந்ததில்லை என்று!

அலைபாயுதே படத்தைப் போல் மற்றொரு காதல் படம் வருவதற்கு இனி வாய்ப்புகள் இல்லை என்று எளிதாக சொல்லலாம். அந்த படத்தின் அழகியல்...

Posted by Vignesh Pandithurai on Tuesday, 19 August 2014


Similar News