அக்டோபர் 7'ம் தேதி பிரபாஸின் 25'வது படத்தின் அறிவிப்பு பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கிறது.
தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகன் பிரபாஸ், இவரின் படங்கள் இந்தியாவின் அனைத்து மொழிகளில் வெளியாவது மட்டுமின்றி அயல்நாடுகளிலும் வசூலை வாரி குவிக்கும். தற்பொழுது சலார், ராதே ஷ்யாம், ஆதி புருஷ் போன்ற பான் இந்திய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது 25'வது பட அறிவிப்பை பிரம்மாண்டமாக வெளியிடவிருக்கிறார் பிரபாஸ். இதன் இயக்குனராக நாக் அஸ்வின் இருப்பார் என இப்பொழுதே தகவல்கள் தெலுங்கு திரையுலகை பரபரக்க வைத்து வருகின்றன.