'தல' அஜித் நடிக்கும் அடுத்தடுத்த 3 படங்கள்

Update: 2021-05-07 09:45 GMT

நடிகர் அஜித் நடிக்கும் புதிய 3 படங்களை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களால் செல்லமாக 'தல' என அழைக்கப்படும் நடிகர் அஜித் தற்பொழுது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து 3 படங்களை பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.

அடுத்ததாக போனிகபூர் தயாரிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஒருபடம் நடிப்பார் எனவும்,

அடுத்தபடியாக 'சூரரைப்போற்று' இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




 


இந்த இரண்டு படங்களும் முடிந்த பின்னர் அஜித் அவர்களுக்கு அதிக ஹிட் படங்களை குடுத்த இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் படம் நடிப்பார் என உறுதியாக கூறப்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா தற்பொழுது சூப்பர் ஸ்டார் நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Similar News