திடீர் திருப்பம்! 'தி ஃபேமிலி மேன்' 3ஆம் பாகத்தில் விஜய் சேதுபதியா?

Update: 2021-06-17 09:30 GMT

'தி பேமிலி மேன்' அடுத்த சீசனில் விஜய் சேதுபதி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


அமேசோன் ப்ரைமில் வெளியாகி இந்தியாவில் இதுவரை அதிகம் பேர் பார்த்த இணைய தொடர்களில் 'தி ஃபேமிலி மேன்' முதலிடம் வகிக்கிறது. முதல் பாகத்தில் காஷ்மீர் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முற்படும் சதி திட்டங்கள் முறியடிக்கப்படுவதுதான் மையப்புள்ளியாக விளங்கியது.

இதன் இரண்டாம் பாகத்தில் இலங்கை தமிழ் போராளிகளை இணைத்து கதை பிண்ணப்பட்டிருந்த காரணத்தினால் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சீரிசின் பெரும்பகுதி கதை சென்னையில் நடப்பதால், இதன் படப்பிடிப்புகளும் சென்னையில் நடந்துள்ளது. அந்த நேரத்தில் சீரியலின் இயக்குனர்கள், ராஜ் மற்றும் டீகேவும், நடிகர் மனோஜ் பாஜ்பாயும் விஜய் சேதுபதியை சந்தித்து பேசி இருக்கிறார்கள்.


இந்த தொடரில் இலங்கை போராளி குழு தலைவர் பாஸ்கரனாக நடிக்க விஜய் சேதுபதியைத்தான் முதலில் அணுகியதாகவும், அவர் நடிக்க மறுத்து அவர் தான் மைம்கோபியை சிபாரிசு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தி பேமிலி மேன் சீரிசின் 3வது சீசனில் நடிக்க விஜய்சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாவும், அதற்காக நடந்த சந்திப்புதான் இது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Similar News