ஒரு வார குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்ட தமிழ் பிக்பாஸ் சீசன்-4 பிரபலம்!

Update: 2021-04-20 11:40 GMT

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் நிகழ்ச்சி கடந்த பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர், ஒரு வார குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.










அந்தவகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் அர்ச்சனா என்பதும், இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக புகழ்பெற்றவர் என்பதும், பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது அன்பு குரூப் ஆரம்பித்து தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் அன்பை பொழிந்து வந்ததால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் இதனால் அவர் 77-வது நாளில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் ஒரு சில நிகழ்ச்சிகளின் மூலம் தற்போது அவர் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து வருகிறார் என்பதும், சமீபத்தில் அர்ச்சனாவின் தங்கை அனிதா கர்ப்பமான நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தைக்கு அனிதா 'ஹாப்பி' என்று பெயர் வைத்துள்ளார். பிறந்து ஒரு வாரமே ஆன இந்த குழந்தையின் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள அர்ச்சனா, குழந்தைக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Similar News