"நான் 4 வருஷம் ஜர்னலிஸ்ட்டா இருந்துருக்கேனாக்கும்" - என ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய பிரியா பவானி சங்கர்!
"நான் 4 வருஷம் ஜர்னலிஸ்ட்டா இருந்துருக்கேனாக்கும்" என நடிகை பிரியா பவானி சங்கர் பெருமை பொங்க தி.மு.க தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு தி.மு.க ஆட்சி அமைக்கும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன்படி வரும் 7'ம் தேதி ஆளுநர் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.
இந்த நிலையில் அனைத்து சினிமா பிரபலங்களும் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
இதில் நடிகை பிரியா பாவனி சங்கர் ஒருபடி மேலே போய் "நான் 4 வருஷம் பத்திரிக்கையாளராக இருந்தேன்" என கூறி அரசியல் எனக்கு தெரியாத விஷயமில்லை என கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டர் பதிவில், "நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் @mkstalin அவர்கள் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழிநடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக்கொண்டிருக்குறோம்.வாழ்த்துகள்🙏🏼😊" என பதிவிட்டிருந்தார்.
அதற்கு சில ரசிகர்கள் கேள்வி எழுப்பவே, "This cracked me up 😂 பெரிய CID.. ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் timeline la இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் journalista இருந்திருக்கேன். என் வேலையே அதுதான்😂 இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும் 🤣" எனவும் பதிலளித்துள்ளார்.