"எடுத்த வரைக்கும் நல்லா வந்துருக்கு" - 'சூர்யா 40' திரைப்படம் குறித்து இயக்குனர்!

Update: 2021-06-08 07:00 GMT

"சார் எதாவது பாட்டு போட்டு குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும், அப்டேட் கேட்டுகிட்டே இருக்காங்க" என ஜாலியாக இசையமைப்பாளர் இமானுக்கு இயக்குனர் பாண்டியராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான்.


இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளை இயக்குனர் பாண்டிராஜ் கொண்டாடினார். அதற்கு திரையுலகில் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதில் இசையமைப்பாளர் டி.இமான் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் போது பதிலாக பாண்டிராஜ் "சாங் எதாவது Final பண்ணி கொடுத்தீங்கன்னா.. single ரிலீஸ் பண்ணலாம்... அப்டேட்.. அப்டேட்னு கேட்டுகிட்டே இருக்காங்க!" என்று ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.


மேலும் 'சூர்யா 40' பற்றி தெரிவிக்கையில், "#Suriya40 update

Dear #AnbaanaFans

35% படம் முடிஞ்சுருக்கு .

எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு . அடுத்த schedule Lockdown முடிஞ்சதும் start பண்ண வேண்டியதுதான் Our team Ready .

Title Mass ah ,

Pre Anoucement ஓட வரும் . July வரை time kodunga plz" என குறிப்பிட்டுள்ளார்.

Similar News