'தனுஷ் 43' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யஜோதி பிலிம்ஸ்!

Update: 2021-07-11 05:15 GMT

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் விலகல் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புகைப்படம் ஒன்றை சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.


நடிகர் தனுஷ், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது விறுவிறுப்பாக நடித்து வரும் 43-வது படத்தில் இருந்து இயக்குனர் கார்த்திக் திடீர் என வெளியேறியதாக ஒரு தகவல் வெளியானது. இதனை மறுக்கும் விதமாக தற்பொழுது தயாரிப்பு நிறுவனம் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளது.


இயக்குனர் கார்த்திக் நரேன்.... திடீர் என தனுஷ் படத்தில் இருந்து விலகியதாகவும், எனவே இந்த படத்தை தனுஷ் திருடா திருடி பட இயக்குனர் சுப்பிரமணியம் சிவாவுடன் சேர்ந்து இயக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரவ துவங்கியது. இந்த தகவல் ஏற்கனவே வதந்தி என்பது வெளியாகியுள்ள நிலையில், இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது D43 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தனுஷுடன் இயக்குனர் கார்த்திக் நரேன் மாஸ்க் அணிந்து கொண்டு டயலொக் டிஸ்கஸ் செய்வது போல் சத்யஜோதி பிலிம்ஸ் புகைப்படம் வெளியிட்டுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News