குருப்'பின் 50 கோடி வசூல் சாதனை - மகிழ்ச்சியில் துல்கர் !

Update: 2021-11-18 05:00 GMT

50 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது துல்கர் சல்மான் நடித்த 'குருப்'.




 


துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வெள்ளியன்று குருப் திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் குறித்து மிகவும் சந்தோஷமாக இருக்கிறார் இப்படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான துல்கர் சல்மான்.




 


இது குறித்து அவர் கூறுகையில், "வாவ். நிச்சயமாக இது பெரிய தொகை தான். தூக்கமில்லாத உறவுகள், நிச்சயத்தன்மை இல்லாத, சுய சந்தேகங்களை கூட ஏற்படுத்திய நிகழ்வுகள், டென்சன் மற்றும் மன அழுத்தம் என நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் மொத்தமாக பலன் கிடைத்துள்ளது. ரசிகர்கள் மீண்டும் தியேட்டர்களுக்கு வந்ததற்கும் எங்களை ஏற்றுக்கொண்டதற்கும் மிக்க நன்றி" என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்

Similar News