தளபதி 65: ஜார்ஜியாவில் படப்பிடிப்பு முடிவது எப்போது தெரியுமா?

Update: 2021-04-21 15:20 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்.அந்தவகையில் ரசிகர்கள் அனைவராலும் தளபதி என்று அன்போடு அழைக்கப்படுகிறார். மேலும் தளபதி 65' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளதாகவும் அதன் பின்னர் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது


ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தலில் ஓட்டு போட்ட உடன் அன்று இரவு ஜார்ஜியா கிளம்பிய படக்குழுவினர் இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை திரும்புவார்கள் என்று படக்குழுவினர்களின் வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.


அதன் பின்னர் மே மாதம் முதல் வாரத்தில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News