கொரோனோ'வால் 'விஜய் 65' படத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரிய சிக்கல்

Update: 2021-05-07 09:00 GMT

விஜய் நடிக்கும் 'விஜய் 65' படத்தின் படப்பிடிப்பு கொரோனோ'வால் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் தயாராவி வரும் படம் 'தளபதி65', மாஸ்டர் படத்திற்கு அடுத்தபடியாக விஜய் நடிப்பில் உருவாகி வரும் 65'வது படமாகும் இது.

கடந்த மாதம் தேர்தல் முடிந்தவுடன் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடந்தது. அதன் பின்னர் சென்னையில் படப்பிடிப்பை தொடரலாம் என படக்குழுவினர் இங்கு வந்த நிலையில் கொரோனோ காரணமாக அனுமதி கிடைக்காத நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக படத்தின் வெளியீடும் தள்ளி போகலாம் என படக்குழுவினர் கூறி வருகின்றனர்.




 


கமர்ஷியல் படமாக இது விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் படப்பிடிப்பு தொடரமுடியாமல் இருப்பதால் ரசிகர்கள் வருத்தத்துடன் இருக்கின்றனர்.

Similar News