'தளபதி 65'ல் விஜயுடன் வில்லனாக மோதும் பிரபல பாலிவுட் ஹீரோ!

Update: 2021-05-10 09:00 GMT

'தளபதி 65'ல் விஜயுடன் பிரபல பாலிவுட் ஹீரோ வில்லனாக நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்த கையோடு முதற்கட்ட படப்படிப்பை படக்குழு வேகமாக முடித்தது. அடுத்தகட்டமாக படப்பிடிப்பை தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்தனர் படக்குழுவினர் ஆனால் கொரோனா பரவல் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.


இதற்கிடையில் விஜயுடன் மோதும் வில்லன் யார்ன்று ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் பிரபல பாலிவுட் ஹூரோ ஜான் ஆப்ரஹாம் அவர்களை வில்லனாக நடிப்பதற்கு படக்குழு அனுகியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் 'தளபதி 65' ன் வில்லன் ஜான் ஆப்ரஹாம்தான்.

Similar News