'தளபதி 65' படத்தில் இணையும் பிரபல காமெடி நடிகர்!

Update: 2021-06-08 03:00 GMT

'தளபதி 65' படத்தில் விஜயுடன் இணைவதை உறுதி செய்துள்ளார் காமெடி நடிகர் யோகிபாபு.


இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜயின் 65-வது படம் உருவாகி வருகிறது. பெயரிப்படாத இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ள நிலையில் கொரோனோ காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.


இந்நிலையில், இப்படத்தின் காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் யோகிபாபு இணையவுள்ளதாக அவரே உறுதிபடுத்தியுள்ளார். யோகிபாபு சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போது 'தளபதி 65' படத்தில் நடிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Similar News