"ஒத்த செருப்பு சைஸ் 7" ஹிந்தி பதிப்பு தலைப்பை ரசிகர்களிடம் கோரும் பார்த்திபன்!
"ஒத்த செருப்பு சைஸ் 7" படத்தின் ஹிந்தி ரீமேக்'ற்கு தலைப்பை ரசிகர்களிடம் கேட்டுள்ளார் இயக்குனர் பார்த்திபன்.
தமிழ் சினிமாவில் தனக்கென புதிய பாதை வகுத்தவர் பார்த்திபன். கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகள் மூலம் முத்திரை பதித்தவர். இவரின் சமீபத்திய படைப்பான "ஒத்த செருப்பு சைஸ் 7" தேசிய விருதை பெற்றது.இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் பெற்று தந்து தமிழ் சினிமாவை கவுரவப்படுத்தினார்.
சமீபத்தில் ஒத்த செருப்பு படம் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக பார்த்திபன் அறிவித்திருந்தார். இந்நிலையில் 'ஒத்த செருப்பு சைஸ் 7' ஹிந்திக்கு என்ன பெயர் வைக்கலாம்? அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும்...' என்று நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவு மூலம் ரசிகர்களிடம் கேட்டுள்ளார். பலதரப்பட்ட ரசிகர்களும் இதற்கு பதிலளித்து வருகின்றனர்.