அமெரிக்காவின் 700 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைக்கப்போகும் 'அண்ணாத்த' !

Update: 2021-10-28 12:00 GMT

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 700 திரைகளில் வெளியாகவிருக்கிறது சூப்பர் ஸ்டாரின் 'அண்ணாத்த'




 


இயக்குனர் சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ரஜினிகாந்த் அவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளதால் இப்படத்தின் அயல்நாட்டு வெளியீடு மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.




 


அமெரிக்காவில் 'அண்ணாத்த' தமிழ்ப் படம் 416 தியேட்டர்களில் திரையிட உள்ளார்கள். இதன் தெலுங்கு டப்பிங்கான 'பெத்தன்னா' 261 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது. சிங்கப்பூரில் 23 தியேட்டர்களில் திரையிடப்ட உள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் கூடுமே தவிர குறையாது என விநியோகஸ்தர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News