கபில்தேவ்வாக ரன்வீர் சிங் நடிக்கும் '83' படத்தின் ட்ரெய்லர் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
வரலாற்றில் 1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இதை தழுவி ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் 83 என்ற படம் உருவாகியுள்ளது.
படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24'ம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் டிரைலர் நவம்பர் 30'ல் வெளியாகிறது.