கொரோனோவால் தள்ளிப்போகும் #KGF 2 ரிலீஸ்?

Update: 2021-05-25 10:00 GMT

கொரோனோ இரண்டாம் அலை காரணமாக கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் வெளியீடு தள்ளிப்போகிறது.


கன்னட கதாநாயகன் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் 'கே.ஜி.எப்'. பிரசாந்த் நீல் இயக்கி இருந்த இப்படம் வசூலையும் வாரிக் குவித்தது. இபடத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது, கே.ஜி.எப் படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்களிடயே இந்த படத்தின் ரிலீஸ் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஒரே சமயத்தில் 5 மொழிகளிலும் வெளியாகவுள்ளதாகவும், ஜூலை 16-ம் தேதி 'கே.ஜி.எப் 2' வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்தது.


இதற்கிடையில் தற்போது கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கே.ஜி.எப் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் கே.ஜி.எப் 2 படம் திட்டமிட்டபடி ஜூலை 16-ம் தேதி வெளியாகாது எனக் கூறப்படுகிறது. மேலும் பட ரிலீஸ் தேதி பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என தெரிகிறது.

Similar News