வேற வழியில்லாமல் OTT-'யில் வெளியிடுகிறோம் - 'ஜகமே தந்திரம்' பற்றி தயாரிப்பாளர்!

Update: 2021-06-08 02:30 GMT

'ஜகமே தந்திரம்' படத்தை ஓ.டி.டி வெளியிட நடிகர் தனுஷ் கடைசி வரை விரும்பவில்லை' என 'ஒய்நாட்' சசிகாந்த் தெரிவித்துள்ளார்.


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், 'ஒய்நாட்' சசிகாந்த் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ் நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்' இந்த படம் இந்த மாதம் 18'ம் தேதி நெட்ப்ளிக்ஸ்'ல் வெளியாக உள்ளது.


இந்த படத்தை பற்றி 'ஒய்நாட்' சசிகாந்த் கூறும் போது, "தனுஷ் சினிமா கேரியரில் இந்த படம் மிக பெரிய படம். படம் போஸ்டர் ரிலீஸ் தேதி போட்டே தொடங்கினோம். கிட்டதட்ட இரண்டு வருடம் ஆகிவிட்டது. கொரோனாவால் எல்லாம் முடங்கி போனது. நானும், தனுசும் ரொம்ப ஆசையாக இந்த படத்தை தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்ய இருந்தோம். ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் மக்களை தியேட்டருக்கு வாங்க என்று சொல்ல முடியாது. வேறு வழியின்றி ஓடிடியில் படத்தை வெளியிட உள்ளோம். இதனால் தனுசுக்கும் எனக்கும் பெரிய கருத்து வேறுபாடு எல்லாம் இல்லை. ஆனால் அவர் ஓடிடியில் வெளியாவதை விரும்பவில்லை" என தெரிவித்தார்.

Similar News