ஐந்து மாதங்கள் கழித்து ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது சிம்புவின் ஈஸ்வரன்.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால் நடித்த படம் 'ஈஸ்வரன்'. நீண்ட நாள் கழித்து சிம்பு படம் குறித்த வேளையில் வெளியானதால் இந்தப்படம் சிம்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்பொழுதெல்லாம் படம் வெளியீட்டின் போதே ஓ.டி.டி வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடுகிறது. ஆனால் ஈஸ்வரன் வெளியாகி 5 மாதங்கள் ஆகியும் இதன் ஓ.டி.டி வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளிவராததால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
இந்நிலையில் நாளை (ஜூன் 12) முதல் இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.