மாநாடு திரைப்படம் ஓ.டி.டி-யில் வெளியாகுமா என்ற ரசிகர்களின் சந்தேகத்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கமளித்துள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'மாநாடு'. கொரோனோ பரவல் ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் இப்படம் ஓ.டி.டி'யில் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்த நிலையில் இது குறித்து தகவல் தெரிவித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி "தியேட்டர்கள் திறந்து சகஜமான நிலை ஏற்படும் வரை காத்திருந்து மாநாடு படத்தை வெளியிட தயாரிப்பு நிர்வாகம் தயாராக உள்ளது" என தெரிவித்துள்ளார்.