தமிழகத்தில் இன்று விறுவிறுப்பாக காலை 7 மணி முதல் வாக்கு பதிவு நடந்து வரும் நிலையில் பொதுமக்களும் திரையுலக பிரபலங்களும் அரசியல்வாதி தலைவர்களும் அவர்களது குடும்பங்களும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
திரையுலகப் பிரபலங்களான நடிகர்கள் பலர் வாக்களித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்.மேலும் உலகநாயகன் கமலஹாசன் அவர்களது மகளுடன் ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசு பள்ளியில் வாக்களித்தார்.
முக்கிய நடிகர்களான நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, அருண்விஜய் சத்யராஜ், இயக்குனர் சீனு,நடிகர் சித்தார்த், நடிகை ரித்விகா,இயக்குனர் டி ராஜேந்தர், முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு, கவிப்பேரரசு வைரமுத்து,கவியரசு வைரமுத்து, ஆர்ஜே பாலாஜி, நடிகர் சசிகுமார், நடிகர் விக்ரம், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் அவர்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.