1000 திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவிய பழம்பெரும் நடிகை - குவியும் பாராட்டு!

Update: 2021-05-22 08:45 GMT

மாபெரும் நடிகையும், தயாரிப்பாளரும், இயக்குனருமான கலைமாமணி ஜெயசித்ரா இன்று காலை திரையுலகினர் 1000 பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்ற அடிப்பை தேவையான பொருள்களை வழங்கினார்.


கொரோனோ இரண்டாம் அலை தமிழகத்தில் தீவிரமாக தொற்று ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதனால் அரசு ஊரடங்கு அமல்படுத்திய நிலையில் சினிமா படப்பிடிப்புகள் இல்லாததால் சினிமா தொழிலாளர்கள் வேலையின்றி வருமானமின்றி தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இளகிய மனம் படைத்தவர்கள் உதவி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகையும், இயக்குனருமான ஜெயசித்ரா 1000 திரைப்பட தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.


மேலும் அவர், "கலை உறவுகள் கவலை படாமல் தைரியமா சந்தோஷமாக இருங்கள், விரைவில் நல்லது நடக்கும் , எல்லோருக்கும் ஒரு நல்ல தீர்வு விரைவில் நடக்கும், அனைத்து பிரச்சனைகளும் நடிகர் சங்கம் மூலம் தீர்க்கப்படும், நடிகர் சங்கம் உங்கள் தாய் வீடு" எனவும் நம்பிக்கையான வார்த்தைகளையும் கூறியுள்ளார்.

Similar News