1,000 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ஆர்.ஆர்.ஆர்

Update: 2022-04-03 13:15 GMT

ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்குகிறது இந்தியாவின் மிகப் பெரிய ஹிட்டான ஆர்.ஆர்.ஆர் படம்.




இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அலியாபட் மற்றும் பலர் நடித்த ஆர்.ஆர்.ஆர் படம் கடந்த மார்ச் மாதம் 25'ஆம் தேதி வெளியானது. படம் வெளியாகி 10 நாட்களுக்குள் பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளது அதில் குறுப்பிடத்தக்கதாக 1,000 கோடி ரூபாய் வசூலை நெருங்குகிறது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்.




தெலுங்கில் மட்டும் 200 கோடி வசூலையும், உலக அளவில் 500 கோடி வசூலை கடந்துள்ளது. இதுவரை கர்நாடகத்தில் 50 கோடி, தமிழகத்தில் 59 கோடி, கேரளாவில் 15 கோடி, ஹிந்தியில் 165 கோடி வசூலை கடந்துள்ளது. மேலும் படத்தின் சேட்டிலைட் உரிமம், ஓ.டி.டி உரிமம் ஆகியவற்றின் வசூலை எல்லாம் வைத்து பார்க்கும்போது விரைவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நிகழ்த்தி சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News