12 பிரிவின் கீழ் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது "தி பேமிலி மேன் 2" வெப் தொடர்.
இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீக்கே இயக்கத்தில்கடந்த ஜூன் மாதம் ஒ.டி.டி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற தொடர் "தி பேமிலி மேன் 2", இதில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி, பவன் சோப்ரா என பலர் நடித்திருந்தனர். அனைவரின் நல்ல நடிப்பாலும், விறுவிறுப்பான திரைக்கதையாலும் பெரும் வரவேற்பை பெற்றது இந்த தொடர்.
இந்நிலையில் இந்த "தி பேமிலி மேன் 2" தொடர் பிலிம்பேர் விருக்கு 12 பிரிவின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த சீரிஸ், இயக்குனர், நடிகர், நடிகை, ஒரிஜினல் ஸ்டோரி, குணசித்ர நடிகை ஆகியவை முக்கியமான பிரிவுகள் ஆகும்.