இதுவரை இல்லாத அளவிற்கு 120 கோடி பட்ஜெட்டில் தனுஷின் அடுத்த படம் அமைவதாக உள்ளது.
இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகராக வலம் வரும் தனுஷ் தற்பொழுது நடித்து வரும் ஹாலிவுட் படம் மூலம் உலகளாவிய நடிகராக உயரவுள்ளார். அடுத்தபடியாக சேகர் கம்முலா இயக்கும் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்நிலையில இந்த படம் ரூ. 120 கோடி பட்ஜெட்டில் தயாராக இருக்கிறது.
இயக்குனர் சேகர் கம்முலா தனுசுடன் இணையும் படம் மூன்று மொழிகளில் உருவாவதால் முதன்முதலாக 120 கோடியில் ஒரு படத்தை இயக்கப்போகிறார். திரையரங்கு வெளியீடு, ஓ.டி.டி வெளியீடு, தொலைக்காட்சி உரிமம் என தனுஷ் மதிப்பு உயர்ந்து வருவதால் இந்த முடிவு என தெரிகிறது.