வெற்றி கூட்டணியின் புதிய படம் ! பூஜையுடன் இன்று துவங்கியது !
Cinema Updates.
மோகன்லால், ஜீத்து ஜோசப் வெற்றி கூட்டணியின் 'டுவெல்த் மேன்' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
மலையாள திரையுலகின் வெற்றி கூட்டணியான மோகன்லால், ஜீத்து ஜோசப் இணையும் புதிய படமான 'டுவெல்த் மேன்' படம் பெரும் எதிர்பார்ப்பின் நடுவில் துவங்கப்பட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பிற்கு மோகன்லால் நடித்த திருஷ்யம் இரு பாகங்களும் முக்கிய காரணமாகும். அதிலும் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியா முழுவதும் வெற்றிகரமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வலம் வந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் மீண்டும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பார் என கூறப்பட்டது. இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.