லியோ படத்தில் 13 திருத்தங்கள் - தணிக்கை குழு நடவடிக்கை!
நடிகர் விஜய்யின் லியோ படத்தில் ஆபாச சர்ச்சை வசனம் நீக்கம் முதலிய 13 திருத்தங்களை தணிக்கை குழு நடவடிக்கையாக எடுத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படம் லியோ. இதில் சஞ்சய்தத், அர்ஜுன், திரிஷா கௌதம் மேனன், மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் லியோ பட டிரைலர் வெளியானது. அதில் விஜய் பேசிய ஆபாச வார்த்தை சர்ச்சையாகவும் வெடித்தது. இந்த நிலையில் லியோ படம் தணிக்கைக்கு சென்றது . இதில் 13 திருத்தங்களை மேற்கொள்ள பட குழுவினருக்கு தணிக்கை குழு அறிவுறுத்தி உள்ளது. அதாவது விஜய் ஆபாச வார்த்தை பேசும் இடத்தில் பீப் ஒலி இடம் பெற வேண்டும்.
மேலும் கெட்ட வார்த்தைகள் வரும் இடங்களில் இதனை பின்பற்ற வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற செய்ய வேண்டும். ரத்தம் தெறிக்கும் சில சண்டை காட்சிகளை நீக்க அல்லது மாற்றிட வேண்டும். சிகரெட் கம்பெனிகள் பெயரை உபயோகிக்க வேண்டாம்.
சிறைச்சாலை தொடர்பான சில வரிகளை நீக்க வேண்டும். சஞ்சய் தத் நடித்துள்ள சில கொடூரமான காட்சிகளை நீக்க அல்லது மாற்ற வேண்டும். பாடல்களில் உரிய அனுமதி இன்றி பொருள்கள் இடம் பெறும் காட்சிகளை நீக்க வேண்டும் உட்பட 13 திருத்தங்களை மேற்கொள்ள தணிக்கை குழு அறிவுறுத்தி இருக்கிறது.
SOURCE: DAILY THANTHI